முதல்வருக்கு வள்ளல்பெருமான் மனு

May 18, 2008
.
சிதம்பரம், மே.18: சிதம்பரம் காட்டு மன்னார் கோயில் பகுதிகளில் வெள்ளக்காலங்களில்  ஏற்படும் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு ரூ.200 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் எம்பி டாக்டர் வள்ளல் பெருமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
.
இதுகுறித்து அவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு ஆண்டும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொது மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அரசு  நிவாரணம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட நிதியை அளிக்கின்றதே யொழிய, நிரந்தர தீர்வு என்று இதுவரை காணப்படவில்லை.

மழைக்காலங்களில் சிதம்பரம் காட்டு மன்னார் கோயில் தாலுகா பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டும், துண்டிக்கப்பட்டும் தீவு போல் ஆகி விடும். மழை இல்லாத நேரங்களில் கடல் நீர் ஏறுவதால், பல கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு அதிகரித்து விடும்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காட்டு மன்னார் கோயில் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு உடனடியாக ரூ. 200 கோடி நிதியை நபார்டு வங்கி அல்லது உலக நிதி வங்கி மூலம் பெற்று இந்த ஆண்டே பொதுப் பணித் துறை பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றுக்கரை, வெள்ளியங்கால் ஓடை, கான்சாகிப் வாய்க்கால் செப்பனிட வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே வல்லம்படுகை, மாதிரவேளூர், தீத்துக்குடி, எருக்கன் காட்டுப்படுகை போன்ற இடங்களில் தடுப்பு அணை கட்டவேண்டும்.
இவ்வாறு முதல்வருக்கு அனுப்பியுள்ள  மனுவில் கூறியுள்ளார்.


கடலூர் மாவட்ட பள்ளி மாணவ மாணவிகள் 2.5 லட்சம் பேருக்கு இலவச பாட புத்தகங்கள் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைப்பு

May 17, 2008

 

 கடலூர்,மே17

கடலூர் மாவட்டத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் சுமார் 2.5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு  இலவச பாட புத்தகங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைப்பட்டுள்ளது…

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=413226&disdate=5/17/2008&advt=2


குண்டர் சட்டம் அவசியம்: திருமாவளவன்!

May 17, 2008

மக்கள் விரோத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள குண்டர் சட்டம் அவசியம், அதை வரவேற்கிறோம்” என தொ‌ல். திருமாவளவன் கூ‌றினா‌ர்.

நெய்வேலி‌யி‌ல் ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌ன் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமைப் பொறுத்தவரை ஆங்காங்கே சில இடங்களில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்தாலும் சட்டம் ஒழுங்கு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தீண்டாமையை எதிர்த்து உத்தப்புரத்தில் சுவர் இடிக்கப்பட்டது தலித் மக்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியது.

மக்கள் விரோத சக்திகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள குண்டர் சட்டம் அவசியம், அதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இந்த குண்டர் சட்டம் அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்தி விடக்கூடாது என்பதை அரசு கவனித்து செயல்படுத்த வேண்டும்.

தமிழக அரசின் 2 ஆண்டு செயல்பாடு குறித்து ராமதாஸ் தெரிவித்த கருத்துகளுக்கு தான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரத்தில் மே 29ஆம் தேதி நடத்தவிருந்த தலித் கிறிஸ்தவர் அரசியல் எழுச்சி மாநாடு ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு‌ள்ளது எ‌ன்று திருமாவளவன் கூ‌றினா‌ர்.


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யுங்கள்…

May 16, 2008

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யுங்கள்…

தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்கென கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள இக்காலக்கட்டத்தில் தமிழக அரசு தேர்வாணையம் மூலமாகவும் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் அரசு வேலைக்கு ஆட்களை நியமனம் செய்துகொண்டிருக்கிறது.

அரசு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது மிகமிக அவசியம் ஆகும்.ஆனால் சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்வதில் பின்தங்கியே உள்ளனர். அதுபற்றிய அடிப்படைத் தகவல்களை அறியாமல் உள்ளனர்.
எனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எவ்வாறு பதிவு செய்வது என்பதுகுறித்து தகவல்களை இங்கே அளிக்கின்றோம்.

குறைந்தது 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெற்றதற்கான
(1) மதிப்பெண் சான்றிதழ் (Mark list)
(2) குடும்ப அட்டை (Ration card)
(3) சாதிச் சான்றிதழ் (Community certificate)
(4) மாற்றுச் சான்றிதழ் (Transfer certificate)
ஆகிய அனைத்துச் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்களுடன் அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும்.

கடலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

முன்னதாக அலுவலகத்திற்கு காலை 10 மணியளிவல் சென்று பதிவு விண்ணப்பம் பெற்று, அதனை முழுமையாகப் பூர்த்தி செய்து, அதனை உரிய அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பதிவு செய்தவுடன் பதிவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்படும். அதனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அதனை புதுப்பித்து வரவேண்டும்.கூடுதல் கல்வித்தகுதியோ அல்லது தொழில்நுட்பத் தகுதியோ அதாவது தட்டச்சு, சுருக்கெழுத்து, கணிணி பயிற்சி முடித்திருந்தால் அதையும் கொண்டுசென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தப் பதிவானது உங்களுடைய எதிர்கால வேலை வாய்ப்புக்கு உறுதுணையாக இருக்கும்.

இது அல்லாது தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டு தேர்வுகளை நடத்தும். அதனைக் கண்காணித்து தகுதி பெற்றிருந்தால் உடனடியாக விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் உங்கள் பதிவை ஆண்லைன் மூலமாக புதிப்பித்து கொள்ளலாம்…http://www.employment.tn.gov.in/ucanrenew.asp

 

 


1 லட்சம் மாணவருக்கு மலிவுவிலையில் எல்காட் லேப்டாப்

May 16, 2008

சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மலிவு விலையில் ஒரு லட்சம் நோட்புக்(லேப்டாப்) கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படும் என்று எல்காட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து எல்காட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20,000 முதல் ரூ.21000 வரையிலான விலையில் ஒரு லட்சம் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.
320 ஜிபி ஹார்ட் டிஸ்க், 2 ஜிபி ராம், டிவிடி ரைட்டர், 15.4 அங்குல மானிட்டர், மோடம், புளூ டூத், வெப் காமிரா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இந்த கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கம்ப்யூட்டர் வழங்கப்படும். கம்ப்யூட்டர் வாங்க விரும்பும் மாணவர்கள் நேரடியாக எல்காட் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

உலக அமைதிக்காக 10 ஆ‌ண்டாக நடைபயணம் செ‌ல்லு‌ம் கடலூர் வாலிபர்!

May 15, 2008

உலக அமைதிக்காக கடந்த 10 ஆ‌ண்டுகளாக இந்தியா முழுவதும் நடந்து வரும் கடலூர் வாலிபர் நே‌ற்று பவானி வந்தடை‌ந்தா‌ர்.

 
 

 

D

கடலூர் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்த சி.ஆர்.கால‌னியை சேர்ந்தவர் துரைராம் (48).இவர் கடந்த 1998 வருடத்திற்கு முன் அப்பகுதியில் கொத்தனாராக பணியாற்றி வந்தார். சிவன் மற்றும் காளியின் தீவிர பக்தராக இருந்த இவருக்கு பல்வேறு சோதனைகள் ஏற்பட்டதன் விளைவாக இந்து மதத்தில் இருந்து கி‌றிஸ்தவ மதத்திற்கு மாறினாராம்.

பின் கி‌றிஸதவ ஆலயங்களுக்கு சென்றபோது அங்கும் அவர்களின் நடவடிக்கையில் துரைராமிற்கு அதிருப்தி அளித்தது. இதன் காரணமாக கி‌றிஸ்தவ ஆலயங்களுக்கு செல்வதையும் நிறுத்திவிட்டார். இவருக்கு திருமணமாகி சிவபாக்கியம் என்ற மனைவியும் கனிமொழி, மனோன்மணி என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

வரது நடவடிக்கை இவருடைய மனைவி, குழந்தைகளுக்கு பிடிக்காததால் கடந்த 1998ஆ‌ம் ஆ‌ண்டு வீட்டை விட்டு வெளியே வந்த துரைரா‌ம், இந்த உலகத்தில் இருக்கும் மக்கள் அமைதியாக வாழ நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.

அதன்படி முதலில் கன்னியாகுமரிக்கு சென்று அந்த மண்ணை முத்தமிட்டு வணங்கி தன்னுடைய நடைபயணத்தை தொடங்கியுள்ளார். சென்னை, ஆந்திரா, மகாரா‌‌ஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, அரியானா, பஞ்சாப் என இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களை நடந்தே சுற்றிவிட்டு கடந்த ஆ‌ண்டு மீண்டும் தமிழகம் வந்துள்ளார்.

கடந்த வாரம் கோயமுத்தூர் வந்து அங்கிருந்து நேற்று பவானி வந்தார். இங்கிருந்து மேட்டூர் வழியாக கர்நாடகா மாநிலம் செல்கிறார் துரைராம். இவர் ஒரு வண்டி வைத்து அதை இழுத்துக்கொண்டே செல்கிறார். அந்த வண்டியில் கட்டில், ஆடைகள், மழைவந்தால் டேரா போடும் வசதி என அனைத்தும் வைத்துள்ளார்.

இது குறித்து துரைரா‌ம் கூறுகை‌யி‌ல், நாள்தோறும் காலை ஐந்து மணிக்கு நடைபயணத்தை துவங்கி பத்து கி.மீ., துரம் பதினொறு மணிக்குள் கடந்துவிடுவதாகவும் பின் மாலை நான்கு மணிவரை ஓய்வெடுத்துக்கொண்டு நான்கு முதல் இரவு எட்டுமணிவரை மீண்டும் பத்து கி.மீ. ூரம் நடப்பதாகவும் கூறுகிறார்.

நடப்பது தனக்கு ஆனந்தத்தை அளிப்பதாகவும் உலக அமைதி வேண்டி மேற்கொள்ளும் இந்த நடைபயணத்தை அடுத்து வரும் 2012 ம் ஆண்டில் முடிக்கபோவதாகவும் அவ‌ர் கூறினார்.


காங்கிரஸ்-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்களுக்கிடையே பயங்கர மோதல்

May 2, 2008

ஆம்பூர்: ஆம்பூர் நகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ்-இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பெண் கவுன்சிலர்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்தனர்.

ஆம்பூர் நகரசபையின் சாதாரண கூட்டம் தலைவர் நஜீர் அகமது தலைமையில் நடந்தது.

அப்போது பேசிய அதிமுக, பாஜக கவுன்சிலர்கள், ஆம்பூரில் மின்சாரம் தாக்கி 2 பெண்கள் உடல் கருகினர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது டாக்டர் பணியில் இல்லை. அவரை தேடி அவரது கிளினிக்கிற்கு சென்று அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. அதற்குள் அந்த பெண்கள் இறந்துவிட்டனர்.

அரசு மருத்துவமனையை கண்டித்து ஒட்டுமொத்தமாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கூடுதல் டாக்டர்களை நியமிக்க அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அந்த பெண்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க காவல்துறையிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றனர்.

அப்போது திடீரென்று எழுந்த காங்கிரஸ் கவுன்சிலர் யுவராஜ், ரெட்டி தோப்பு பகுதிக்கு உட்பட்ட 4 வார்டு பகுதி மக்கள் மழைக் காலங்களில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மேம்பாலம் அமைக்ககோரி பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அப்போது பொறுப்பில் இருந்தவர்கள் வந்து பார்த்தார்கள். தற்போது வாணியம்பாடி எம்எல்ஏ அப்துல்பாசித்தும் பார்வையிட்டு சென்றார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கவுன்சிலர் பிலால் குறுக்கிட்டு, எம்எல்ஏ பணி செய்து கொண்டுதான் இருக்கிறார். அவரை எப்படி குறை கூறலாம் என்று வாக்குவாதம் செய்தார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. தகாத வார்த்தைதகளால் திட்டிக் கொண்டனர்.

டேபிள் மீது ஏறி இருவரும் சண்டை போட்டனர். அவர்களை மற்ற கவுன்சிலர்கள் சமரசம் செய்ய முயன்றனர். அப்போது வெளியே கூடியிருந்த சிலர் நகராட்சி கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து எம்எல்ஏவை எப்படி குறை சொல்லலாம் என்று கூறி பிலாலுக்கு ஆதரவாக பேசி தகராறு செய்தனர். ஆபாச வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.

இதைப் பார்த்து பயந்துபோன பெண் கவுன்சிலர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். அறைக்குள் அத்துமீறி நுழைந்தவர்களை ஆணையாளர் மணிகண்டன், நகராட்சி பணியாளர்கள் வெளியேற்றினர். நகரசபை தலைவர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் கூட்டம் முடிந்துவிட்டதாக கூறி தலைவர் நஜீர்அகமது தனது அறைக்கு சென்று விட்டார்.

இதுபோன்று அமளியில் ஈடுபடும் கவுன்சிலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.