| கடலூரை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 23). இவரது தம்பி பிரேம்குமார்(வயது 18). இருவரும் ஹுண்டாய் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த நண்பர்கள் ராஜசேகர்(வயது 26),சந்தோஷ்குமார்(22),வினோத்குமார்(21),விக்னேஷ்வரன்(20) ஆகியோருடன் மெரீனா கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு சுற்றி பார்த்து விட்டு உழைப்பாளர் சிலை அருகே கடலில் குளிக்க இறங்கினர். விக்னேஸ்வரனை தவிர மற்ற 5 பேரும் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி நீரில் மூழ்கினார்கள். இதை பார்த்த பொது மக்களில் சிலர் அவர்களை காப்பாற்ற கடலில் இறங்கினார்கள். அவர்களால் வினோத்குமார், பிரேம்குமார் ஆகிய இரு வரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. ராஜசேகர், சந்தோஷ் குமார், பிரபாகரன் ஆகிய 3 பேரும் கடல் அலையில் சிக்கி பலியாகி விட்டனர். அவர்களது உடல்களை கண்டுபிடிக்க முடியாததால் அண்ணா சதுக்கம் போலீசில் வினோத்குமார் புகார் செய்தார். இதே சமயத்தில் வடபழனி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 18) என்பவரும் நண்பர்கள் 9 பேருடன் உழைப்பாளர் சிலை அருகே குளித்த போது கடல் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்து விட்டார். இவரது உடலும் கிடைக்காததால் அண்ணா சதுக்கம் போலீசில் புகார் செய்தனர். மீனவர்கள், தீயணைப்பு படையினர் உதவியுடன் 4 பேரையும் போலீசார் கடலில் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இன்று கடற்படை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடந்தது. |
|
Thanks India Tamil News |
மெரீனா கடலில் குளித்த 4 பேர் சாவு:ஹெலிகாப்டரில் தேடுகிறார்கள்
October 3, 2008நெல்லிக்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் த.மு.மு.க. மாநில தலைவர் ஜவாஹிருல்லா பேச்சு
August 12, 2008நெல்லிக்குப்பம், ஆக. 13-
நெல்லிக்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று நெல்லிக்குப்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் த.மு.மு.கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
விழிப்புணர்வு கூட்டம்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர த.மு.மு.க. சார்பில் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சின்னதெருவில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஜின்னா தலைமை தாங்கினார். ஹாவாமொய்தீன், அப்துல்காதர், அப்சில்ஹாதி, ஹாவா நஜிமுதீன், தீன், சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத்தலைவர்அப்துல் ரஹீம் வரவேற்றார்.
கூட்டத்தில் த.மு.மு.க. மாநிலத்தலைவர் டாக்டர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அனுமதி வழங்க வேண்டும்
அரசியல் தூய்மையற்றதாக உள்ளதால் தற்போது தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் அதே சமயம் பேரிடர்கள், சுனாமி, சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறது. தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் பல லட்சம் செலவு செய்கிறார்கள். வெற்றி பெற்றதும் செலவு செய்ததை விட பல மடங்கு சம்பாதித்து விடுகிறார்கள்.
எங்கு குண்டு வெடித்தாலும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று காவல் துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர். சுதந்திர தினத்தன்று தீவிரவாதத்தை எதிர்த்து மதுரையில் நடைபெறும் அணி வகுப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். அணி வகுப்பு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுதான் நடைபெறும். பயங்கரவாதத்தை முதலில் கையில் எடுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ்.தான் முஸ்லிம்கள் அல்ல.
உண்ணாவிரத போராட்டம்
நெல்லிக்குப்பம் பகுதியில் குறுகலான முக்கிய சாலை ஓரத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற கோரி நெல்லிக்குப்பம் நகர த.மு.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டர், தாசில்தார், நகராட்சி கமிஷ்னர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் பயன் இல்லை. உடனடியாக நெல்லிக்குப்பத்தில் உள்ள டாஸ்மார்க் கடையை அகற்றாவிட்டால் மாவட்ட தலைவர் தலைமையில் கடையை அகற்றும் வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு மாநிலத்தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாநில செயலாளர்கள் அப்துல் சமது, ஜுனைத், ஷேக்தாவூத் (கடலூர்) மாவட்ட துணை தலைவர் முகமது உசேன், பக்ருதீன், அல்லரஹ்மான், அப்துல்காதர், பாய்துல்லாஹ், முகமது ரபீக் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் நகர செயலாளர் அசரப் அலி நன்றி கூறினார்.
கடலூர் மாவட்டத்தில் சிறுபான்மை (முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் மற்றும் புத்தமதத்தினர்) இன பள்ளி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு உதவித்தொகை கலெக்டர் ராஜேந்திரரத்னூ தகவல்
August 2, 2008கடலூர் மாவட்டத்தில் சிறுபான்மை இன பள்ளி மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கலெக்டர் ராஜேந்திரரத்னூ கூறியுள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஐ.டி.ஐ. மற்றும் ஐ.டி.சி. தொழிற்பயிற்சி கல்வி நிறுவனங்களில் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்புவரை (என்.சி.வி.டி. படிப்புகள் உள்பட) படிக்கும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு (முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் மற்றும் புத்தமதத்தினர்) பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை நடப்பாண்டில் (2008-09) வழங்க மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தில் 2007-2008-ம் ஆண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை பெற்றவர்கள் தொடர்ந்து கல்வி படிக்கும் பட்சத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பள்ளி மேற் படிப்பு (புதுப்பித்தல்) கல்வி உதவிதொகை பெறலாம்.
தகுதிகள்
கடந்த ஆண்டு பள்ளி, கல்லூரி அல்லது தொழிற்பயிற்சி இறுதி தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிறுபான்மையினத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு வருகை கல்வித்துறையின் வரையறைகளை பின்பற்றி இருக்க வேண்டும். இதை அந்தந்த கல்வி நிறுவனங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
கல்வி உதவிதொகையில் சேர்க்கை மற்றும் படிப்பு(கற்பிப்புக்) கட்டணம் ஆகியவை வழங்கப்படும். படிக்கும் வகுப்புகளுக்கு ஏற்ப ரூ.3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். விடுதியில் சேர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் வகுப்பை பொறுத்து பராமரிப்புக் கட்டணம் மாதம் ரூ.325 முதல் 510 வரை வழங்கப்படும். விடுதியில் தங்கி படிக்காதவர்களுக்கு மாதம் ரூ.140 முதல் 330 வரை அதிகபட்சமாக 10 மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
விண்ணப்பபடிவம்
வருவாய் துறையின் துணை வட்டாட்சியர் அந்தஸ்துக்கு குறையாதவரிடம் இருந்து ஜாதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மத்திய, மாநில, தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மற்றும் சுய தொழில் செய்யும் பெற்றோர்களின் ஆண்டுவருமானம் (அனைத்து வழிகளிலும்) குறித்த விவரங்களை உறுதி ஆவணம் படிவத்தில் ரூ.10 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் சுய கையொப்பமிட்டு வழங்கிட வேண்டும். முந்தைய ஆண்டின் இறுதி தேர்வின் மதிப்பெண் பட்டியலையும் இணைக்க வேண்டும்.
சிறுபான்மையினத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அனைத்து ஆவணங்களுடனும் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு புதுப்பித்தலுக்கு வருகிற 10-ந் தேதிக்குள்ளும், புதிதாக விண்ணப்பிப்பவர்கள் 31-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்
மாணவ, மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சரிபார்த்து மாணவ, மாணவிகளின் பட்டியலை வகுப்பு வாரியாக பரிந்துரைக்கப்பட வேண்டிய படிவத்தில் மட்டும் பூர்த்தி செய்தும் குறுந்தகட்டில் (ஏரியல் பாயின்ட்) பதிவு செய்து புதுப்பித்தலுக்கு வருகிற 20-ந் தேதிக்குள்ளாகவும், புதியதுக்கு செப்டம்பர் 10-ந் தேதிக்குள்ளாகவும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இக்கல்வி உதவி தொகை தொடர்பான அனைத்து விவரங்கள், விண்ணப்ப படிவங்கள், கல்வி நிறுவனங்களால் பரிந்துரைக்கப்படவேண்டிய படிவங்கள் என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி கல்வி உதவிதொகையை பெற்று சிறப்பாக கல்வி பயிலுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு கடலூரில் ஜூலை-8 ல் ஆள்சேர்ப்பு
July 4, 2008சென்னை, ஜூலை 3 : இந்திய ராணுவத்திற்கு சிப் பாய் பொதுப்பணி மற்றும் வர்த்தகப்பணி உள் ளிட்ட பணிகளுக்கான ஆள்சேர்ப்பு கடலூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அமைப்பு மைதானத்தில் ஜூலை 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் பாண்டிச் சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கள் இந்திய ராணுவத்தின் சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் வர்த்தகப் பணி, சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் கிளார்க் மற் றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிகல் ஆகிய பணிக ளுக்கான ஆள்சேர்ப்பில் பங்கேற்கலாம்.
சிப்பாய் பொதுப்பணிகான வயது வரம்பு 17 1/2 முதல் 21 வரை. மற்ற பணிகளுக்கு 17 1/2 வயது முதல் 23 வரை. சிப்பாய் பொதுப்பணிக்கு கல்வி இறுதித் தேர்வில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் வர்த்தகப் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். மற்ற பணிகளுக்கு பிளஸ் 2 அல்லது இன்டர் மீடியேட் படிப்பில் ஆங்கிலம், கணக்கு, வேதியி யல், இயற்பியல் பாடங்கள் படித்து 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். ஆள்சேர்ப்புக்கு பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி சான்று, பள்ளி மாற்றுச் சான்று, நன்னடத்தை சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, முன்னாள் படை வீரர் மகன் எனில் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநரிடமிருந்து சான்று, படை வீரர் மகன் எனில் யூனிட்டிலிருந்து சான்று, தேசிய மாணவர் படை மற்றும் விளை யாட்டு சான்று (இருந்தால் மட்டும்), அண்மையில் எடுக்கப்பட்ட வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 8 ஆகியவைகளை கொண்டு செல்ல வேண்டும்.
அசல் சான்றுகள் மற்றும் சான்றொப்பம் பெற்ற நகல்களை கொண்டு வர வேண்டும். உடல்தகுதி தேர்வுக்கு தேவையான உடைகளுடன் ஆள் சேர்ப்பு இடத்திற்கு காலை 5 மணிக்குள் இருக்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
லால்பேட்டை இனய தளம்
நன்றி தினமணிசிறுபான்மையின மாணவ மாணவிகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: வரும் 31ம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
July 4, 2008கடலூர் : முதல் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் முதல் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங் களில் படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள் ளது. பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகையில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிப்பவர்கள் செலுத்திய சேர்க்கை கட்டணம் அல்லது அதிக பட்சமாக ஆண்டிற்கு ரூ.500 மற்றும் கல்விக் கட்டணம் செலுத்திய தொகை அல் லது அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு ரூ.350 வழங்கப்படும்.
பராமரிப்பு கட்டணமாக விடுதியில் தங்காமல் படிப்பவர்களுக்கு முதல் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பிரதி மாதம் 100 வீதமும்இ விடுதியில் தங்கி 6 முதல் 10ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு மாதம் ரூ.600 வீதம் 10 மாதங்களுக்கு மட்டும் கணக்கிட்டு வழங்கப்படும். பள்ளிப் படிப்பு கல்வி ஈஉதவித் தொகை பெற முந்தைய பள்ளி இறுதி தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ரூ. ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண் டும். மாணவ மாணவிகள் விண்ணப்ப படிவங்களை உரிய ஆவணங்களுடன் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்க வரும் 31ம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் பெற்ற விண்ணப்பங் களை பிற்படுத்தப் பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் 10ம் தேதிக்குள் “சிடி’யில் பதிந்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
லால்பேட்டை இனைய தளம்
சிறுபான்மை இன மாணவ- மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தகவல்
June 15, 2008கடலூர்,ஜுன்.15-
கடலூர் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கல்வி உதவித்தொகை
மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடன் வழங்கப்படும் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையினர் (முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர் மற்றும் புத்தமதத்தினர்) மாணவ, மாணவிகளுக்கு 2008-2009 ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பப்படிவங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 30-ந்தேதி என்று மத்திய, மாநில அரசு தெரிவித்துள்ளது.
30-ந்தேதிக்குள்
எனவே உரிய விண்ணப்பங்களை சிறுபான்மையின மாணவ, மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு 30-ந்தேதிக்குள் அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் இந்த உதவித் தொகைக்காக பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து கல்வி உதவித்தொகை பற்றிய விவரங்களை [ www.minorityaffairs.gov.in www.tn.gov.in/bcmbcmw/doc என்ற இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை பரிந்துரை செய்யும் படிவத்தில் அறிக்கையை தொகுத்து (குறுந்தகட்டுன்) 15-7-08 க்கும் சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு (DBC & MWO) அறிக்கையை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
நன்றி தினத் தந்தி
எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அந்தந்த பள்ளிகளிலேயே ஏற்பாடு அதிகாரி தகவல்
June 15, 2008எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அந்தந்த பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பதிவு அட்டைகள் வழங்க ஏற்பாடு
` எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கும்போது அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு படிவங்களை வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று அப்பள்ளிகளின் மூலமாக பதிவு அட்டைகள் வழங்க ஏற்பாடுகள் செய்ய கலெக்டரின் ஆணைகள் பெறப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் அலைச்சல், சிரமம் மற்றும் போக்குவரத்து செலவீனம் குறையும். கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்.
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் மாணவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். அதற்கு ஆதாரமாக கடலூர் மாவட்ட முகவரியுடனான குடும்ப அட்டை, சான்றொப்பமிட்ட ஜெராக்ஸ் நகல் இணைக்கப்பட வேண்டும். குடும்ப அட்டையின் முகவரியை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல், டி.சி, சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
ஜெராக்ஸ் நகல்
எனவே மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் பெற பள்ளிகளுக்கு செல்லும்போது தங்களது குடும்ப அட்டை சான்றொப்பமிட்ட ஜெராக்ஸ் நகல் எடுத்து சென்று பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட த.மு.மு.க. துணைத் தலைவர் S.A.முனவ்வர் ஹுசைன் வஃபாத்
June 7, 2008வஃபாத் செய்தி…
லால்பேட்டை வடக்கு தெரு S.A. முனவ்வர் ஹுசைன் அவர்கள் இன்று 07.06.2008 ( 9.15PM ) மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் எஸ்.எம்.எஸ் மூலம் புகார் தெரிவிக்கலாம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை
June 5, 2008சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் எஸ்.எம்.எஸ் மூலம் புகார் தெரிவிக்கலாம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை…
நெய்வேலி தொழிலாளர்கள் போராட்டம் : மின்உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்
June 3, 2008நெய்வேலி : நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளதால், மின்உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பணிநிரந்தரம், போனஸ் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மார்ச் மாதம் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதனிடையே, கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவெதுவும் ஏற்படாததை அடுத்து, நேற்று முதல் அங்கு மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். என்.எல்.சி.யில் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு பணிகள் பாதிப்படைந்துள்ளன. இந்த போராட்டம் மேலும் நீடித்தால், மின்உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தொழிற்சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
Thanks Kdm
Posted by lalpet
Posted by lalpet
Posted by lalpet