சிறுபான்மையின மாணவ மாணவிகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்: வரும் 31ம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் : முதல் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் முதல் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங் களில் படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள் ளது. பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகையில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிப்பவர்கள் செலுத்திய சேர்க்கை கட்டணம் அல்லது அதிக பட்சமாக ஆண்டிற்கு ரூ.500 மற்றும் கல்விக் கட்டணம் செலுத்திய தொகை அல் லது அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு ரூ.350 வழங்கப்படும்.

பராமரிப்பு கட்டணமாக விடுதியில் தங்காமல் படிப்பவர்களுக்கு முதல் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பிரதி மாதம் 100 வீதமும்இ விடுதியில் தங்கி 6 முதல் 10ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு மாதம் ரூ.600 வீதம் 10 மாதங்களுக்கு மட்டும் கணக்கிட்டு வழங்கப்படும். பள்ளிப் படிப்பு கல்வி ஈஉதவித் தொகை பெற முந்தைய பள்ளி இறுதி தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் (அனைத்து வழிகளிலும்) ரூ. ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண் டும். மாணவ மாணவிகள் விண்ணப்ப படிவங்களை உரிய ஆவணங்களுடன் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்க வரும் 31ம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் பெற்ற விண்ணப்பங் களை பிற்படுத்தப் பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு வரும் 10ம் தேதிக்குள் “சிடி’யில் பதிந்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

லால்பேட்டை இனைய தளம்

Leave a Reply