இந்திய ராணுவத்திற்கு கடலூரில் ஜூலை-8 ல் ஆள்சேர்ப்பு

சென்னை, ஜூலை 3 : இந்திய ராணுவத்திற்கு சிப் பாய் பொதுப்பணி மற்றும் வர்த்தகப்பணி உள் ளிட்ட பணிகளுக்கான ஆள்சேர்ப்பு கடலூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அமைப்பு மைதானத்தில் ஜூலை 8ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் பாண்டிச் சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கள் இந்திய ராணுவத்தின் சிப்பாய் பொதுப் பணி, சிப்பாய் வர்த்தகப் பணி, சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் கிளார்க் மற் றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிகல் ஆகிய பணிக ளுக்கான ஆள்சேர்ப்பில் பங்கேற்கலாம்.

சிப்பாய் பொதுப்பணிகான வயது வரம்பு 17 1/2 முதல் 21 வரை. மற்ற பணிகளுக்கு 17 1/2 வயது முதல் 23 வரை. சிப்பாய் பொதுப்பணிக்கு கல்வி இறுதித் தேர்வில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் வர்த்தகப் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். மற்ற பணிகளுக்கு பிளஸ் 2 அல்லது இன்டர் மீடியேட் படிப்பில் ஆங்கிலம், கணக்கு, வேதியி யல், இயற்பியல் பாடங்கள் படித்து 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். ஆள்சேர்ப்புக்கு பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி சான்று, பள்ளி மாற்றுச் சான்று, நன்னடத்தை சான்று, இருப்பிட சான்று, சாதி சான்று, முன்னாள் படை வீரர் மகன் எனில் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநரிடமிருந்து சான்று, படை வீரர் மகன் எனில் யூனிட்டிலிருந்து சான்று, தேசிய மாணவர் படை மற்றும் விளை யாட்டு சான்று (இருந்தால் மட்டும்), அண்மையில் எடுக்கப்பட்ட வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 8 ஆகியவைகளை கொண்டு செல்ல வேண்டும்.

அசல் சான்றுகள் மற்றும் சான்றொப்பம் பெற்ற நகல்களை கொண்டு வர வேண்டும். உடல்தகுதி தேர்வுக்கு தேவையான உடைகளுடன் ஆள் சேர்ப்பு இடத்திற்கு காலை 5 மணிக்குள் இருக்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

லால்பேட்டை இனய தளம்

நன்றி தினமணி

Leave a Reply