எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அந்தந்த பள்ளிகளிலேயே ஏற்பாடு அதிகாரி தகவல்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அந்தந்த பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பதிவு அட்டைகள் வழங்க ஏற்பாடு

` எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்கும்போது அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு படிவங்களை வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று அப்பள்ளிகளின் மூலமாக பதிவு அட்டைகள் வழங்க ஏற்பாடுகள் செய்ய கலெக்டரின் ஆணைகள் பெறப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் அலைச்சல், சிரமம் மற்றும் போக்குவரத்து செலவீனம் குறையும். கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் மாணவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். அதற்கு ஆதாரமாக கடலூர் மாவட்ட முகவரியுடனான குடும்ப அட்டை, சான்றொப்பமிட்ட ஜெராக்ஸ் நகல் இணைக்கப்பட வேண்டும். குடும்ப அட்டையின் முகவரியை படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல், டி.சி, சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

ஜெராக்ஸ் நகல்

எனவே மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் பெற பள்ளிகளுக்கு செல்லும்போது தங்களது குடும்ப அட்டை சான்றொப்பமிட்ட ஜெராக்ஸ் நகல் எடுத்து சென்று பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
                          

                                             லால்பேட்டை இனைய தளம்

Leave a Reply