நெய்வேலி தொழிலாளர்கள் போராட்டம் : மின்உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்

நெய்வேலி : நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளதால், மின்உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பணிநிரந்தரம், போனஸ் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மார்ச் மாதம் என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதனிடையே, கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவெதுவும் ஏற்படாததை அடுத்து, நேற்று முதல் அங்கு மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். என்.எல்.சி.யில் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அங்கு பணிகள் பாதிப்படைந்துள்ளன. இந்த போராட்டம் மேலும் நீடித்தால், மின்உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தொழிற்சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

www.lalpet.com

Thanks Kdm

Leave a Reply